ETV Bharat / sitara

அஜித்துக்கும் வலை விரிக்கிறதா பாஜக? - புகழ்ந்து தள்ளும் எஸ்.வி.சேகர் - 2021 சட்டப்பேரவை

நடிகர் அஜித்குமார் பற்றி நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் ட்வீட் செய்துள்ளார்.

ajith
எஸ்.வி.சேகர்
author img

By

Published : Nov 28, 2019, 8:44 AM IST

தமிழ்நாடு அரசியல் களம் அவ்வப்போது சூடு பிடிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அரசியலில் ரஜினி-கமல் இணைந்து 2021ல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பேச்சுகள் ஒலித்தன.

2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் தங்களது வேலையை இப்போதே தொடங்கிவிட்டன. அரசியலில் ஜூனியராக இருந்தாலும் சீக்கிரமாக வந்து தன்னுடைய பலத்தை கமல் ஏற்கனவே காட்டியிருந்தாலும், ரஜினியோ இதுவரை கட்சி தொடங்கவில்லை.

Rajini kamal
ரஜினி - கமல்

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் வந்துவிட்டதாக ரஜினி-கமல் அவ்வப்போது பேசி அன்றைய விவாதப்பொருளாக மாறிவிடுவர்.

நடிகர் விஜய்யின் பேச்சுக்களும் அரசியலை ஒற்றியே இருப்பது சமீபகாலமாக அவர் அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டின் எதிர்காலம், கடந்த காலங்களில் திரைத்துறையில் இருந்தே உருவானதுபோல் இனியும் தொடரலாம் என்பதையே அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோரை அரசியல் வலை சூழ்ந்திருந்தாலும் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக, தான் உண்டு தனது வேலை உண்டு என எந்த விவகாரத்திலும் தலையிடாமல் தனி வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.

Kamal ajith rajini
கமல் - அஜித் - ரஜினி

இவரையும் அரசியலில் இழுத்துவிட்டுவிட வேண்டும், அரசியல் சாயம் பூசிவிட வேண்டும் என சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். சிலர் அஜித்தை புகழ்ந்து பேசி வருவதும் இதையே குறிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி, கமல் இணைவது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயல்குமார், அஜித் நேர்மையானவர், மிகுந்த தொழில்பக்தி மிக்கவர் என்று பேசியிருந்தார்.

Ajith
அஜித்

எந்த அரசியல் சாயமும் தன் மீது விழுந்துவிடாமல் தனக்கான பாதையில் வீரநடை போட்டுக்கொண்டிருக்கும் அஜித் பற்றி நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் ட்வீட் செய்துள்ளார்.

அதில், 'எந்த அரசியல் மாயைக்குள்ளும் சிக்காத நேர்மையாளர் அஜித்' என குறிப்பிட்டு அஜித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது பகிர்ந்துள்ளார்.

  • எந்த அரசியல் மாயைக்குள்ளும் சிக்காத நேர்மயாளர். pic.twitter.com/IizYQV0zvM

    — S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த பதிவுக்கு ட்விட்டரில் பலரும் நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உங்களிடம் சிக்குவதற்கு அவர் என்ன சூப்பர் ஸ்டாரா? 'எதார்த்தமானவர் சராசரி வாக்காளர்களில் அவரும் ஒருவர்' என சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்

Intro:Body:

S. Ve. Shekher

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.