தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சரிடம் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மொதுமக்கள் எனப் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்சம் ரூபாயை இயக்குநர் சுசீந்தரன், நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதியை நேரில் சந்தித்து வழங்கினார்.
இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவும் எண்ணத்தில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம், நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினேன். அதில் கலந்து கொண்டோர் வழங்கிய கட்டணத் தொகை ஐந்து லட்சம் ரூபாயை மொத்தமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.
இந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மோத்தி, மக்கள் தொடர்பாளர் ரேகா, என் உதவியாளர் வினோத், வைசாலி மற்றும் எங்களோடு துணையாக நின்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், முக்கியமாக இந்தச் செய்தியை அனைவருக்கும் கொண்டு சென்று அறியச் செய்த அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடகத்துறை, சமூக வலைதளத்தினர் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகனுடன் சேர்ந்து மரம் நட்டு வைத்த அஜய் தேவ்கன்