ETV Bharat / sitara

திருமண பந்தத்தில் 15 ஆண்டுகள் - நட்சத்திர தம்பதிக்கு திருமண நாள் - பூவெல்லாம் கேட்டுப்பார்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியரான சூர்யா - ஜோதிகா, தங்களின் 15ஆவது திருமண நாளை இன்று கொண்டாடினர்.

Surya Jyotika 15th wedding anniversary
Surya Jyotika 15th wedding anniversary
author img

By

Published : Sep 11, 2021, 4:56 PM IST

ஹைதராபாத்: கடந்த 2006ஆம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் நடிகர் சூர்யா. தற்போது இந்தத் தம்பதியினருக்கு தியா, தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு காலையில் இருந்தே ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பூவெல்லாம் கேட்டுப் பார் திரைப்படத்தில் முதன்முறையாக சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்தனர். பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களிலும் இணைந்து நடித்தனர்.

Surya Jyotika 15th wedding anniversary, சூர்யா ஜோதிகா திருமண நாள், சூர்யா ஜோதிகா, ஜோதிகா, சூர்யா, பூவெல்லாம் கேட்டுப்பார், சூர்யா ஜோதிகா 15ஆவது திருமண நாள்

காக்க காக்க திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இதனை இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தனர். பல பத்திரிக்கைகளில் செய்திகள், கிசுகிசுக்கள் வந்தபோதும் இருவரும் தங்களுக்கிடையே எதுவும் இல்லை என்றே கூறினார்.

பின்னர் இருவரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தொடங்க கடைசியில் ஜோதிகா முதன்முறையாக சூர்யா மீதான காதல் குறித்து ஊடகங்கள் முன்னிலையில் மனந்திறந்து கூறினார். தொடர்ந்து 2006இல் சூர்யா - ஜோதிகா திருமணம் பிரபலங்கள் மத்தியில் விமரிசையாக நடந்தது.

இவர்கள் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்பு சுமார் 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்த்தார் ஜோதிகா.

சூர்யா - ஜோதிகா தம்பதியினர் இன்று வெற்றிகரமாக தங்களது 15ஆவது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் தம்பதியினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.