சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை முதல் மீண்டும் தொடங்குகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘சூர்யா 40’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கிராமத்து கதைக்களமான இப்படம் புதுக்கோட்டை, நெல்லை சுற்றுவட்டாரங்களில் படமாக்கப்பட்டு வந்தது.
![surya40_shooting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-surya40-shooting-script-7205221_30062021182959_3006f_1625057999_321.jpg)
பின்னர் கரோனா இரண்டாவது அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதால், சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூர்யா 40 படக்குழுவினரும் ஜூலை 12ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
இதையும் படிங்க: தடைகளை உடைத்த ஹன்சிகாவின் ‘மஹா’ - டீசர் தேதி அறிவிப்பு