இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. பிரியங்கா மோகன், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஒரு முக்கிய சண்டைக்காட்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
அச்சண்டை காட்சியில் 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை காரணமாக திட்டமிட்டபடி அக்காட்சியை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதர காட்சிகளை எடுத்தப் பிறகு இக்காட்சியை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவலால், சூரியாவின் 40 ஆவது படம் சரியான நேரத்தில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.