ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தேவி. திகில் காமெடி கதைக்களம் கொண்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் படக்குழு உருவாக்கி வருகிறது. இந்தப் படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி. பிலிம்ஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தனும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் சண்டைக்காட்சிகள் அண்மையில் சீனாவில் படமாக்கப்பட்டன.
அதற்கு முன்பு கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரம், கர்நாடகம் என பல இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி. அஷ்வின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகளில் படக்குழு தற்போது இறங்கி உள்ளது.