சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கவுள்ள இந்தப் படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா 40' என படக்குழுவினர் இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சூர்யா வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
-
#Suriya40BySunPictures shoot begins!@Suriya_offl will join the sets soon!#Suriya40Poojai #Suriya40 pic.twitter.com/qZ59mE5crl
— Sun Pictures (@sunpictures) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Suriya40BySunPictures shoot begins!@Suriya_offl will join the sets soon!#Suriya40Poojai #Suriya40 pic.twitter.com/qZ59mE5crl
— Sun Pictures (@sunpictures) February 15, 2021#Suriya40BySunPictures shoot begins!@Suriya_offl will join the sets soon!#Suriya40Poojai #Suriya40 pic.twitter.com/qZ59mE5crl
— Sun Pictures (@sunpictures) February 15, 2021
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.15) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் சூர்யா இல்லாத இதர காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பில் சூர்யா இணைந்துக் கொள்வார் என தெரிகிறது. கிராமத்துப் பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, திருநெல்வேலி சுற்றுவட்டாரங்களில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:#Surya40: பிப்ரவரியில் தொடங்கும் படப்பிடிப்பு