'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை நடிகர் சூர்யாவும் குனீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. தற்போது இப்படத்தில் சூர்யா கதாபத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சூர்யா, நெடுமாறன் ராஜங்கம் என்ற பெயரில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: 'காப்பான்' சூர்யா எங்கள் நம்பிக்கை - காவிரி விவசாயிகள் சங்கம்!