'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மன்ட் சார்பில் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரானது இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து படத்திற்கு ஹைப் அதிகரித்திருக்கும் வேளையில், படத்தின் டீஸரை வெங்கடேஷ் தகுபதி, நடிகர் பிரபாஸ், நடிகை சம்ந்தா ஆகியோர் வெளியிடப்போவதாக படக்குழு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இதையடுத்து படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கனவு ஏரோப்ளேன் கம்பெனி நடத்துவது. அந்த அசாதாரண மனிதனின் உண்மைக் கதையை மையமாக வைத்து படத்தின் டீஸர் நீள்கிறது. வெவ்வேறு தோற்றங்களில் வரும் சூர்யா படத்தின் டீஸரிலேயே அதகளம் செய்கிறார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்