ETV Bharat / sitara

வெளியான 'சூரரைப் போற்று' மாறா தீம் சாங்! - சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தின் தீம் சாங்கான 'மாறா' வெளியாகியுள்ளது.

mara
mara
author img

By

Published : Jan 24, 2020, 5:39 PM IST

'இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

படம் மட்டுமல்லாது படத்தின் தீம் சாங் 'மாறா' மீதும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். இந்தபாடல் இந்த வாரம் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இதனையடுத்து '#MaaraTheme' என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். ’காலா’, ‘வடசென்னை’ புகழ் பாடலாசிரியர் அறிவு எழுதிய இந்தப் பாடலை சூர்யா பாடியுள்ளார்.

இதையும் வாசிங்க: என்னடா இது 'காஞ்சனா 3' நடிகைக்கு இப்படி ஒரு சோதனை

Intro:Body:

Suriya Maara theme from soorarai potru unveiled

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.