நடிகர் சூர்யாவின் 40 ஆவது திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, இளவரசு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் நேற்று (நவ.10) அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, படத்தின் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கினார். சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் அவர் தங்க நாணயங்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'ஜெய்பீம்' சூர்யா திரை வாழக்கையில் ஒரு மைல்கல் - இயக்குநர் வசந்த்