நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. ஆரண்ய காண்டம் பட புகழ் தியாகராஜா குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியான நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இநிநிலையில், ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவை அச்சுறுத்தி வரும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கண்டுகொள்ளாமல் இருப்பது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.