ETV Bharat / sitara

நடிகை ரம்யா நம்பீசன் வழங்கும் 'சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்' புதிய இணையத் தொடர்

சென்னை: இணையங்களின் நம்பகத் தன்மைமுன்பு இருந்ததைப்போல் இல்லை என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசன்
author img

By

Published : Jul 17, 2020, 11:53 PM IST

'ஒரு நாள் ஒரு கனவு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். ‘பீட்சா’, ‘சேதுபதி’ ‘சத்தியா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனர் பத்ரி இயக்கத்தில் ரியோவுடன் ‘ப்ளான் பண்ணி பண்ணனும், சிபிராஜ் உடன் ’ரேஞ்சர்', விஜய் ஆண்டனியுடன் ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில்'ரம்யா நம்பீசன் என்கோர்' (Ramya Nambeesan Encore) என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். இதன் மூலம் தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யா நம்பீசன் ,

இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றுவரும் இவர் தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை எழுதி இயக்கியுள்ளார் பத்ரி வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் அல்லது கற்றுக்கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. சுற்றுச்சூழலை நான் புரிந்துகொண்ட விதத்தை, இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள் என்றார்.

நிகழ்ச்சி குறித்து பேசிய ரம்யா நம்பீசன் கூறுகையில், நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம்.

இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை.

இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

என்னுடைய யூடியூப் சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.