தமிழில் 'வீராப்பு', 'தில்லுமுல்லு' உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி, தற்போது பிரசன்னா ஷாமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
கன்னட திரைப்படமான 'மாயாபஜார் 2016' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது.
'புரொடக்ஷன் 6' என்னும் தற்காலிக பெயரில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று (செப்டம்பர் 14) சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில், பிரசன்னா - ஷாம் ஆகியோருடன் ஸ்ருதி மராத்தே, யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென், அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சத்யா இசையமைக்கிறார்.
'ஹலோ நான் பேய் பேசுகிறேன்', 'முத்தின கத்திரிக்காய்', 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய ஐந்து படங்களைத் தொடர்ந்து சுந்தர் சி ஆறாவதாக இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்துவைத்த சுந்தர் சி - சுந்தர் சியின் புதிய படங்கள்
சென்னை: சுந்தர் சி தயாரிப்பில், பிரசன்னா - ஷாம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.