ETV Bharat / sitara

Actress Sujatha Interview: 'நடிக்க ஆர்வமில்லையா?'; மனம் திறக்கும் சுஜாதா! - பிடித்த நடிகர் யார் என கூறிய நடிகை சுஜாதா

தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் 'பருத்திவீரன் சுஜாதா' (Actress Sujatha), தனக்கு நடிக்க ஆர்வமில்லை என வலம்வரும் செய்திகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித்துடன் சுஜாதா
அஜித்துடன் சுஜாதா
author img

By

Published : Dec 21, 2021, 9:17 PM IST

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கமலின் 'விருமாண்டி' படத்தில் அறிமுகமானவர், நடிகை சுஜாதா (Sujatha). அதன் பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான 'பருத்தி வீரன்' இவருக்குப் பரவலான வெளிச்சத்தைத் தேடித் தந்தது.

இத்திரைப்படத்துக்காக ஃபிலிம்பேர் உள்பட பல விருதுகளையும் சுஜாதா பெற்றார்.

அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களின் படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்துவிட்டார். இவர் பேசும் மதுரை மண்ணின் மொழித் திரையில், தனி அடையாளத்தையே தேடித் தந்துள்ளது. தற்போது சுஜாதா குறித்து பல வதந்திகள் வெளிவந்தபடியே உள்ளன. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

அஜித்துடன் சுஜாதா
அஜித்துடன் சுஜாதா

உங்களது முதல் பட அனுபவத்தை நினைவு கூற முடியுமா?

நான் இதுவரை 90 படங்கள் முடித்து விட்டேன். விரைவில் 100ஐ தொடவிருக்கிறேன். எனது கணவரின் நண்பர் பிரளயன் மூலம்தான் எனக்கு 'விருமாண்டி' பட வாய்ப்பு வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். எனது இரண்டாவது மகள் சுபிக்ஷா வயிற்றில் இருந்தாள். எனவே, அதன்பின் வந்த படவாய்ப்புகளில் நடிக்கவில்லை. மகள் பிறந்து சற்று வளர்ந்தவுடன் நடிக்க ஆரம்பித்தேன். இப்படி சில காலம் இடைவெளிக்குப் பிறகு, நான் நடித்த பருத்திவீரன் வெளிவந்தது.

'பருத்திவீரன் 'உங்களுக்குப் பெரிய அடையாளம் அல்லவா?

பலரைப் போல எனக்கும் பருத்திவீரன் ஒரு பெரிய அடையாளம்தான். இந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் ஃபிலிம்பேர் விருது எனக்குக் கிடைத்தது. நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே விருது கிடைத்ததில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டுமல்ல விஜய் டிவி, ஆனந்த விகடன் போன்ற பல ஊடக விருதுகளும் எனக்குக் கிடைத்தன. சுஜாதா பாலகிருஷ்ணன் என அறிய விரும்பிய நான், பருத்திவீரன் சுஜாதா எனப் பேசப்படுகிற அளவுக்கு 'பருத்திவீரன்' எனக்கு முக்கியமான படம். இதற்குக் காரணம் இயக்குநர் அமீர் தான்.

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டால், படங்கள்தான் என்னைத் தேர்வு செய்கின்றன என்று சொல்வேன். பெரும்பாலும் இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக, பொருத்தமாக இருக்கும் எனத் தேர்வு செய்து கொண்டுதான் என்னை நடிக்க அழைக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக்குடன் சுஜாதா
கௌதம் கார்த்திக்குடன் சுஜாதா

பெரும்பாலும் மதுரை மொழி பேசியே நடிக்கிறீர்களே?

என்னிடம் வரும் படங்கள் அப்படித்தான் இருக்கின்றன. பெரும்பாலும் என்றில்லை, வருகிற எல்லாப் படங்களும் அப்படித்தான் இருக்கின்றன. படப்பிடிப்பில் கூட என்னிடம் காட்சிகளையும், வசனங்களையும் சொல்லிவிடுவார்கள். உங்கள் பாணியில், மொழியில் பேசி நடித்து விடுங்கள் என்றுதான் சொல்வார்கள்.

என்னிடம் வரும் படங்கள் எல்லாம் அப்படி மதுரை சார்ந்த படங்களாகவே இருக்கின்றன. வேறு வட்டாரத்தின் ஸ்லாங் பேசி நடிக்க நான் நினைக்கவே இல்லை. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

நடித்ததில் வித்தியாசமான வாய்ப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

எத்தனையோ படங்களில் மதுரை வட்டார மொழிப் பேசி நடித்தாலும், 'கோலி சோடா'வில் நான் நடித்த 'ஆச்சி' பாத்திரம் வித்தியாசமானது என்று சொல்வேன். பலரும் நேரில் என்னிடம் அது பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள்.

இதுவரை மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?

பருத்திவீரன் சமயத்திலேயே பாரதிராஜா சார் பாராட்டியதை மறக்கமுடியாது. இந்தப் பொண்ணு மிக நன்றாக நடித்திருக்கிறார். எதிரில் கேமரா இருக்கிறது என்கிற எந்தவிதமான உணர்வுமின்றி நடிக்கிறார். அந்த அளவுக்கு யதார்த்தமாக நடிக்கிறார். ஆச்சரியமாக இருந்தது என்று பாராட்டினார். அதை மறக்க முடியாது. அண்மையில் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படவிழாவில் பேசிய சேரன், "இவரது நடிப்பைப் பார்த்து எங்களை மறந்து அழுது விட்டோம்" என்றார். டப்பிங்கிலும் மேலும் பலர் அழுது விட்டதாகச் சொன்னார்கள். அதுவும் மறக்க முடியாது.

நடித்த கதாநாயகர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

என் முதல் அறிமுகமே விருமாண்டி படத்தில் கமல் சார் உடன் தான். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என எல்லா கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன். எல்லாரும் என்னைக் கவர்ந்தவர்கள்தான்.

சமீபகாலமாக 'சுஜாதா' குடும்பத்தைக் கவனிப்பதாகவும், படங்களில் நடிக்க ஆர்வமில்லாமல் இருக்கிறார். அவர் கைவசம் படங்கள் ஏதுமில்லை என்றும் ஒரு செய்தி வருகிறதே?

எப்படி இந்தச் செய்தி வந்தது என்று தெரியவில்லை. யாரோ அவிழ்த்து விட்ட கதை போல் இது தெரிகிறது. எனக்கு யார் மீதும் கசப்பு இல்லை. எனக்கு யாரும் விரோதிகளும் இல்லை. அப்புறம் எப்படி இப்படி? அண்மையில் வெளியான 'ஜெய்பீம்' படத்தில் கூட என் நகைதான் காணாமல் போகும். அந்தப் பழி கதைநாயகன் ராஜாக்கண்ணு மேல் விழும்.

இந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனையாக மாறும். அந்தப் படம் பற்றி இப்போது நாடே பேசிக்கொண்டிருக்கிறது. இப்படி என் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த வாரத்தில் கூட நான் நடித்த 'ஆனந்தம் விளையாடும் வீடு' வரவுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மாதமே 'வேலன்', 'மதுரை மணிக்குறவர்' ஆகியப் படங்கள் ரிலீஸாகவுள்ளன.

நான் நடித்து வெளிவர வேண்டிய படங்கள் சில உள்ளன. சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் மதுரையில் இருந்து கொண்டுதான் படங்களில் நடித்து வருகிறேன். இதை அறிந்து கொண்டுதான் எனக்குத் திரைப்பட வாய்ப்புகளும் வருகின்றன.

கரோனா காலத்தில் உலகமே முடங்கிக்கிடந்த போதுதான் நான் நடிக்காமல் இருந்தேன். குடும்பத்துக்காக நடிப்பைத் தவிர்க்கிறேன் என்பதெல்லாம் தவறு. எனக்குக் குடும்பம் முக்கியம் தான். அதேபோல நடிப்பும் முக்கியம். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டுதான் 90 படங்களில் நடித்திருக்கிறேன். இதில் குடும்பமா? நடிப்பா? என்று புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எல்லா நடிகர்களுக்கும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. அது போல்தான் எனக்கும். மகள்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். மூத்தமகள் ஸ்ருதிப் பிரியா வேலைக்குச் செல்கிறாள். சின்னவள் சுபிக்ஷா படித்துக் கொண்டிருக்கிறாள். எனவே, எனது குடும்பப் பொறுப்பு குறைந்திருக்கிறது.

இப்போது எனக்கு எந்தவித குடும்ப அழுத்தங்களும் கிடையாது. அதனால் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பொய்ச்செய்திகளை வதந்திகளை நம்ப வேண்டாம்’

இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க: #HBD தமன்னா - அழகு பதுமையின் பிறந்தநாள் இன்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.