நடிகை ஹன்சிகா நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019ஆம் ஆண்டு '100' திரைப்படம் வெளியானது. அதே ஆண்டு தான் இவரது கடைசி தெலுங்கு படமும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இவர் தெலுங்கில் நடிக்கும், புதுப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 'மை நேம் இஸ் ஸ்ருதி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். முழுக்க முழுக்க ஹன்சிகாவை சுற்றியே இப்படம் நகரும் என கூறப்படுகிறது.
எளிமையான முறையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளாசிக் காமெடி ‘காசேதான் கடவுளடா’ பட ரீமேக்கில் மிர்ச்சி சிவா?