ETV Bharat / sitara

பாலிவுட் பாட்ஷா இப்போ சின்னத்திரையில்! - தொலைக்காட்சியில் ஷாருக்கான்

டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் சிறப்பு நடுவராக கலந்துகொண்டது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SRK
SRK
author img

By

Published : Jan 21, 2020, 11:24 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வியடைந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி அப்படியே திரையரங்குகளை விட்டு வெளியேறியது.

இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாமல் இருந்தது. ஓர் ஆண்டுக்கும் மேலாக இதுவரை அவர் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

டான்ஸ் ப்ளஸ் சிறப்பு நடுவர் ஷாருக்

இதனிடையே ஷாருக்கான், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் டான்ஸ் ப்ளஸ் 5 நிகழ்ச்சியில் ஷாருக் சிறப்பு நடுவராக கலந்துகொண்டுள்ளார்.

இதற்கான ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஷாருக்கான், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக இது ஒளிப்பரப்படும் என்று கூறியுள்ளனர். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கானை வெள்ளித்திரையில் காண முடியவில்லையென்றாலும் சின்னத்திரையில் அவரை பார்த்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிங்க: 'டான்' பட வசனத்தைப் பேசி அசத்திய அமேசான் சிஇஓ

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/videos/sitara/srk-returns-to-small-screen-set-to-appear-in-dance-plus-5/na20200121195221240

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.