புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா. இவர், கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970 லிருந்து 2000-களின் தொடக்கம் வரை திரைப்படங்களில் நடித்துவந்தார்.
இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். தனது திரைப்பட வாழ்க்கையில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்றே சொல்லலாம்.
நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 1966ஆம் ஆண்டு தமிழில் திருவருட்செல்வர் (1966) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் பி. சுப்பிரமணியன் இயக்கிய குமார சம்பவம் (1969), தாசரி நாராயண ராவ் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான டாடா மனவாடு (1972) போன்ற படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார்.
இவர் முதன் முதலில் கே. பாலச்சந்தர் இயக்கிய நூறுக்கு நூறுவில் தான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் டில்லி டு மெட்ராஸ் (1972), இதில் நடிகர் ஜெய்சங்கருக்கு இணையாக நடித்தார். 1970-களின் நடுப்பகுதியில், இவர் தமிழ்த் திரையுலகில் அதிக படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். கே. பாலசந்தர் இயக்கிய வெள்ளிவிழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் 2003ஆம் ஆண்டு முதுகெலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படிங்க : 'ஓ மணப்பெண்ணே' படவிழாவில் வலிமை அப்டேட் கேட்ட ஹரீஷ் கல்யாண்!