ETV Bharat / sitara

‘தி பெட்’ டீசர் வெளியீடு: சிம்புவை புகழ்ந்த ஸ்ரீகாந்த் - தி பெட் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே

’தி பெட்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், சிம்புவுக்கு 'ஹேட்ஸ் ஆஃப்' என ஸ்ரீகாந்த் பேசியது இருதரப்பு ரசிகர்களையும மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

டீசர் வெளியீடு விழா மேடையில் 'தி பெட்’ திரைப்படக் குழு

author img

By

Published : Feb 9, 2022, 8:31 AM IST

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ், ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்நிலையில் 'தி பெட்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் (பிப்.7) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

அப்போது ஸ்ரீகாந்த் பேசுகையில், “முதலில் டைட்டிலை கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது. எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆஃப் சிம்பு. யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.

டீசர் வெளியீடு விழா மேடையில் 'தி பெட்’ திரைப்படக் குழு
டீசர் வெளியீடு விழா மேடையில் 'தி பெட்’ திரைப்படக் குழு

அவர் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரிடம் தன்னை மொத்தமாக ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ளமாட்டார். 'தி பெட்' என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும்.

இந்த டீசர் எல்லோரையும் கவரும் என சொல்ல மாட்டேன். ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக்கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே.

இயக்குநரோ ஸ்வெட்டர், குல்லா என குளிருக்கு இதமாக அணிந்துகொண்டு, மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா ? என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன்” என்றார்.

தனது திரைப்பட டீசர் வெளியீடு விழாவில் நடிகர் சிம்புவை புகழ்ந்த ஸ்ரீகாந்தின் செயல் இருதரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: 'வீரமே வாகை சூடும்' இளம் நாயகன் அகிலனுக்கு குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.