இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
தார்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இவர்களுடன் நடிகர் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “19 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேன். என் சினிமா வாழ்க்கையிலேயே முதன்முறையாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிப்பது மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், லைகா நிறுவனத்துக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.