ETV Bharat / sitara

எஸ்பிபி பணியாற்றிய கடைசி படத்தின் பாடல்கள் ரிலீஸ்! - வா பகண்டையா பட இசை வெளியிட்டு விழா

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பரமணியம் கடைசியாக பாடிய 'வா பகண்டையா' என்ற படத்தின் இசை வெளியிடப்பட்டது.

vapagandaiya
vapagandaiya
author img

By

Published : Feb 18, 2021, 8:18 PM IST

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ், நிழன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வா பகண்டையா'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஜெயகுமார் திரைக்கதை, வசனம் எமுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை இவர் இயக்கியது மட்டுமல்லாது , தனது 'ஒளி ரெவிலேஷன்' நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார்.

இந்தப் படத்தில், யோகி ராம், ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, 'பவர் ஸ்டார்' சீனிவாசன், மனோபாலா, 'காதல்' சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

vapagandaiya
வா பகண்டையா படத்தின் ஒரு காட்சி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது அவர் பணியாற்றிய கடைசி படமாகும். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஆணவக் கொலை, சாதி - இன மோதலைத் தூண்டி மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சின்னு நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அதுக்கெல்லாம் தீர்வு சொல்லும் படமாக இது இருக்கும்" என்றார். பட இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றதையடுத்து விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 100 கிலோ சர்க்கரையில் 3 நாளில் தயாரான பாடகர் எஸ்பிபி உருவ கேக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.