தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவர் குடும்பம் வறுமையில் இருப்பதால், சோனு சூட்டிடம் உதவி கேட்க முடிவு செய்தார்.
இதனையடுத்து ஹைதராபாத்திலிருந்து, மும்பை வரை சுமார் 4000 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று அவரை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சோனு சூட், அச்சிறுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “வெங்கடேஷ், என்னைச் சந்திக்க ஹைதராபாத்திலிருந்து, மும்பை வரை வெறுங்காலுடன் நடந்து வந்துள்ளார். என்னைக் காண நிறையச் சிரமப்பட்டு வந்துள்ளார். அவர் திரும்பிச் செல்வதற்கு நான் வாகனத்தை உருவாக்கினேன்.
இருப்பினும் இத்தனை கிலோ மீட்டர் நடந்தே வந்து என்னைச் சந்திக்க வருபவர்களின் செயலை நான் ஊக்குவிக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.