ETV Bharat / sitara

இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்த சோனியா அகர்வால்

author img

By

Published : Jul 6, 2020, 2:45 PM IST

நான் தமிழ் சினிமாவில் பார்த்த திரைப்படங்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல் கொண்டேன் என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காதல் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அந்த வரிசையில் 2003ஆம் ஆண்டு வெளியான 'காதல் கொண்டேன்' திரைப்படம் ரசிகர்களால் ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

இத்திரைப்படம் மூலம் செல்வராகவன் என்ற இயக்குநரும், இதில் கதாநாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலும் அறிமுகமாகி இருந்தனர். தனுஷ் இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது குறித்து சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடவுளுக்கு நன்றி. செல்வராகவன், கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நன்றி. நான் தமிழில் அறிமுகமாகி தற்போது 17 ஆண்டுகள் ஆகின்றன. படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. நான் தமிழ் சினிமாவில் பார்த்த திரைப்படங்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:புதிதாகப் பிறந்திட நான் புத்தனில்லை வழிவிடு - #14yearsofpudhupettai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.