ETV Bharat / sitara

எஸ்.ஜே.சூர்யா நடித்து 'யு' சான்றிதழ் பெற்ற படம் இதுதான்..!

author img

By

Published : May 8, 2019, 5:35 PM IST

தான் நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது எனக்கு இன்னும் ஒரு கனவாகவே இருப்பதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர்

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள 'மான்ஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நடன இயக்குநர் சாபு ஜோசப், படத்தில் நடித்த அனைவரும் கலந்துகொண்டனர்.

monster audio function
மான்ஸ்டர் படக்குழுவினர்

இதையடுத்து பேசிய படத்தின் நாயகி பேசிய பிரியா பவானி சங்கர், 'இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், கிராஃபிக்ஸ் ஏதும் இல்லாமல் உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

monster
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், நெல்சன் வெங்கடேசன்

இதனைத்தொடர்ந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, படத்தை பார்க்கும் குழந்தைகள் எலியோடு சேர்த்து என்னையும் மிகவும் ரசிப்பார்கள். இயக்குநர் தன்னிடம் படத்தின் வில்லன் எலி என்றதும், என்ன சார் பல புலிகளுக்கு வில்லனா இருந்த என்னை எலியோட நடிக்க சொல்றிங்க என்றேன். நான் நடித்து முதல் முறையாக 'யு' சான்றிதழ் பெற்ற படம் 'மான்ஸ்டர்' தான். தமிழ் சினிமாவில் நான் நடித்து 'யு' சான்றிதழ் பெற்ற படம் என்பது எனக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.

monster
என்ன ஒரு தன்னடக்கம், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்,

'மான்ஸ்டர்' திரைப்படம் வருகின்ற மே 17ஆம் தேதி வெளியாகிறது.

மான்ஸ்டர் படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் எஸ்ஜே சூர்யா

வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் படம் மான்ஸ்டர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் எஸ் ஜே சூர்யா, நடன இயக்குநர் சாபு ஜோசப் ,இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ப்ரியா பவானி சங்கர், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடன இயக்குநர் சாபு ஜோசப் பேசும்போது,

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் பணியாற்றிய குழுவுடன் இப்படத்திலும் பணியாற்றினோம். எலியை வைத்து கதையை கூறும்போது ஆர்வமாக இருந்தது. எலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து வரும் காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சவாலாக இருந்தது.
குழந்தைகளை வைத்து வேலை வாங்க வேண்டும். அதுவும் அவர்களை எலியாக பாவித்து நடனம் அமைக்க வேண்டும் என்பது சேலஞ்சிங்கா இருந்தது என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,

இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அடுத்த படத்திலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். எஸ்.ஜே.சூர்யாவின் லட்சியம் தான் அவரை இன்றுவரை வெற்றியாளராக வைத்திருக்கிறது என்றார்.

பிரியா பவானி சங்கர் பேசும்போது,

இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய இரண்டாவது படம். என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு பிரகாஷ் பாபு, பிரபு, வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு தான் பணிக்கு வருவேன். ஆனால் இப்படத்தில் அதெல்லாம் போதவில்லை.

இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் எலி என்ற புள்ளியில் தான் ஆரம்பமாகும். அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எலி பிடிக்க ஆள் வைத்திருக்கிறார்கள். மனித இனத்திற்கு இணையாக இருக்கும் விலங்கு எலிதான். மனிதனை அழிக்கக்கூடிய ஆள் பலத்தோடு இருப்பது எலிதான்.எலிக்கு கோயிலே இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கூறியதும் அவர் ஒரு காட்சியை நடித்துக் காண்பித்தார். காலையிலிருந்து மாலை வரை தனியாகவே நடிப்பார் எஸ்.ஜே.சூர்யா. இக்கதையின் கருவை கூறியதும் எழுத்தாளர் ஷங்கர் தாஸ் நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.  உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது.
இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். ஐந்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் உழைத்திருக்கிறோம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார்.

என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் இப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இப்படம் என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,

இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தான் இப்படத்தின் கதாநாயகன். 

குழந்தைகளுக்கும் செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். 
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.
இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார்.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்து கொள்வேன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நுணுக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். 17 நாட்களுக்குள் இப்படத்தை வெளியாக முயற்சி எடுத்திருக்கிறார்கள். ‘மாயா‘, ‘மானகரம்’ , ‘மான்ஸ்டர்‘, போன்ற தரமான படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

இந்நிறுவனம் தொடங்கும்போது தரமான படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். தீபாவளி பண்டிகைக்கு எங்கள் பெற்றோர் புது உடைகள் முன்பே வாங்கி வைத்திருந்தார்கள். நாங்கள் கேட்டதும், இருக்கு ஆனால் தீபாவளியன்று குளித்ததும் தான் தருவோம் என்றனர். குளித்ததும் ஆடை உடுத்த எடுத்த போது ஜீன்ஸ் பேண்டை எலி கடித்துக் கிழிந்திருந்தது. எலி மீது கோபம் அன்று ஆரம்பித்தது என்றார்.
யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது? இறுதியில் அதை அவன் கொன்றானா? என்பதை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம்.

இக்கதையை இயக்குநர் கூறியதும், மான்ஸ்டராக பார்க்கக்கூடிய எஸ்.ஜே.சூர்யாவிற்கு எலி மான்ஸ்டராக இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்தோம். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான். அப்படியொரு கதாபாத்திரத்திற்கு எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்தோம். அவரும் அவருடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’. இப்படம் வருகிற மே 17ம் தேதி வெளியாகிறது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.