தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முக கலைஞராக வலம்வருபவர் எஸ்.ஜே. சூர்யா. குஷி, வாலி என மாஸ் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஜே. சூர்யா, ‘இறைவி’ படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார். அதன்பிறகு ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் வில்லனாக தோன்றி அசத்தினார்.
இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த ‘மாநாடு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது எஸ்.ஜே. சூர்யா வெப் சீரிஸில் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கிறது.
'கொலைகாரன்' பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் இத்திரைப்படம், த்ரில்லர் ரகத்தில் உருவாகவுள்ளது. இதன்மூலம் எஸ்.ஜே. சூர்யா முதல்முறையாக வெப் சீரிஸில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி தளங்களில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே வெளியாகத் தொடங்கியுள்ளன. கரோனா சூழலில் ஓடிடி தளங்களையே பலரும் நாடுகின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'?