ETV Bharat / sitara

ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் 'மான்ஸ்டர்' ஹீரோ! - Sj surya new film pooja started

'மான்ஸ்டர்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

sj surya
author img

By

Published : Sep 14, 2019, 8:57 AM IST

Updated : Sep 14, 2019, 10:35 AM IST

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மான்ஸ்டர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறினார் எஸ்.ஜே. சூர்யா.

இந்நிலையில், இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருக்கிறார். ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராக உள்ள இந்தப் படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 'நேர்கொண்ட பார்வை' கலை இயக்குனர், இப்படத்தில் இணைகிறார்.

sj-surya-new-film
sj-surya-new-film

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. சென்னையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா அமிதாப்பச்சனுடன் நடித்து வரும் 'உயர்ந்த மனிதன்' படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுள்ளது. இவரது நடிப்பில் 'இறவாக்காலம்', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:SJ சூர்யாவின் புதிய படம் துவக்கம். Body:SJ சூர்யா சமீபத்தில் 'மான்ஸ்டர்' படத்தில், குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
இப்போது 'மான்ஸ்டர்' மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறிய எஸ் ஜே சூர்யா
இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராக உள்ள இந்தப் படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’ கலை இயக்குனர்,இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார். இந்த படத்தின் பூஜை மிக எளிய முறையில் இப்படத்தின் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. சென்னையில் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்போது SJ சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Conclusion:இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
Last Updated : Sep 14, 2019, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.