இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'மாநாடு', 'பொம்மை' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், 'முத்தின கத்திரிக்காய்' படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இயக்கும் 'கடமையை செய்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவருக்கு நாயாகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை நஹார் ஃபிலிம்ஸ், கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
-
New movie starring @iam_SJSuryah & @iamyashikaanand, titled #KadamaiyaiSei
— Kaushik LM (@LMKMovieManiac) February 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Launched today in the presence of TN minster @Kadamburrajuofl, with a pooja
Directed by Venkat Raghavan @Pro_Bhuvan pic.twitter.com/Q38cTtUvAM
">New movie starring @iam_SJSuryah & @iamyashikaanand, titled #KadamaiyaiSei
— Kaushik LM (@LMKMovieManiac) February 1, 2021
Launched today in the presence of TN minster @Kadamburrajuofl, with a pooja
Directed by Venkat Raghavan @Pro_Bhuvan pic.twitter.com/Q38cTtUvAMNew movie starring @iam_SJSuryah & @iamyashikaanand, titled #KadamaiyaiSei
— Kaushik LM (@LMKMovieManiac) February 1, 2021
Launched today in the presence of TN minster @Kadamburrajuofl, with a pooja
Directed by Venkat Raghavan @Pro_Bhuvan pic.twitter.com/Q38cTtUvAM