சென்னை: ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள ’சிவகுமாரின் சபதம்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள படம் ‘சிவகுமாரின் சபதம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து அவரே தயாரித்துள்ளார். மாதுரி ஜெயின் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிவகுமார் பொண்டாட்டி என்ற சிங்கிள் ட்ராக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் இதை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: நாய்க்கு குரல் கொடுத்த சூரி - ஜூலையில் டிரெய்லர்!