தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி.
இவர் தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், 'சிவகுமாரின் சபதம்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான 'நெருப்பா இருப்பான்' என்ற ரொமான்டிக் பாடல் வரும் வெள்ளிக்கிழமை (ஜுலை.30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான 'சிவகுமாரின் பொண்டாட்டி', 'சித்தப்பா பாடல்கள்' ஆகியவை சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம்: வெளியான தகவல்!