ETV Bharat / sitara

டாக்டர் பட அப்டேட்டை வித்தியாசமாக வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

author img

By

Published : Jul 14, 2020, 5:57 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 16ஆம் தேதி வெளியாகயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்
டாக்டர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்டர்’.

கே.ஜி.ஆர் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்க தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வரும் 16ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் அறிவிப்பை படக்குழு மிகவும் வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியான வீடியோ பதிவில், சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோர் எந்த மாதிரியான பாடல்களை உருவாக்கலாம் என்று உரையாடுகின்றனர். அப்போது அவர்களுக்கு டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாட்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அதை நகைச்சுவையாக சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

"இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேனுமா.. நேரா டூயட் பாட வாயேன்மா" என்று தொடங்கும் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக் பி’ ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.