சிவகார்த்திகேயன் - 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், 'இரும்புத்திரை' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
-
#Hero shoot wrapped up today!
— PS Mithran (@Psmithran) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a wild ride this has been!
Big thank you to all of my technicians who worked tirelessly throughout this wonderful schedule.@george_dop 😬@dhilipaction 🔥@dancersatz 🤣@InfinitMaze 😎@Pallavi_offl 😁
Gearing up for #PostProduction pic.twitter.com/HApS1eJYSE
">#Hero shoot wrapped up today!
— PS Mithran (@Psmithran) November 24, 2019
What a wild ride this has been!
Big thank you to all of my technicians who worked tirelessly throughout this wonderful schedule.@george_dop 😬@dhilipaction 🔥@dancersatz 🤣@InfinitMaze 😎@Pallavi_offl 😁
Gearing up for #PostProduction pic.twitter.com/HApS1eJYSE#Hero shoot wrapped up today!
— PS Mithran (@Psmithran) November 24, 2019
What a wild ride this has been!
Big thank you to all of my technicians who worked tirelessly throughout this wonderful schedule.@george_dop 😬@dhilipaction 🔥@dancersatz 🤣@InfinitMaze 😎@Pallavi_offl 😁
Gearing up for #PostProduction pic.twitter.com/HApS1eJYSE
இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'மால்டோ கித்தாப்புல' சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகாித்துள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நன்றியும் கூறியுள்ளார். இப்படத்தை டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.