ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'?

author img

By

Published : Jun 29, 2021, 11:53 AM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர்
டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'டாக்டர்'. யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸுடன், சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டு காலமாக, 'டாக்டர்' படம் வெளியாகாமல் இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.