'தமிழ்ப்படம் 2' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்டி படத்தில் நடித்துள்ளார் சிவா. இதையடுத்து 'சுமோ' என்னும் பெயரிடப்பட்டுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 'சுமோ' படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். நகைச்சுவையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. படம் குறித்து முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.