சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அயலான் படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 20ஆவது படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் என்பவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
சிங்கப்பாதை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இமான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களின் பாடல்கள் வெற்றிபெற்றன. இதனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக சிவா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த சூர்யா - முணுமுணுக்கும் கோடம்பாக்கம்