ETV Bharat / sitara

அண்ணாத்த படம் தாமதம்: சூர்யா பக்கம் திரும்பிய சிறுத்தை சிவா! - siruthai siva next film with actor surya news in Tamil

அண்ணாத்த படம் தாமதம் ஆவதால் சூர்யா படத்தின் முதல்கட்ட வேலைகளை இயக்குநர் சிறுத்தை சிவா ஆரம்பித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாத்தே தாமதம்: சூர்யா பக்கம் திரும்பிய சிவா!

author img

By

Published : Jan 20, 2021, 1:07 PM IST

இயக்குநர் சிறுத்தை சிவா, ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த எனும் படத்தை இயக்கி வந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா காரணமாக தள்ளிப்போனது. அதன் பிறகு தொடங்கிய படப்பிடிப்பு, கரோனா பிரச்னையால் மீண்டும் நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தற்போதைக்கு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த இயக்குநர் சிறுத்தை சிவா, தற்போது சூர்யாவை வைத்து அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தை முடித்த கையோடு சூர்யா படத்தைதான் சிவா இயக்க திட்டமிட்டிருந்தார். இதனிடையே அண்ணாத்த படவாய்ப்பு வந்ததால் முதலில் அதில் கவனம் செலுத்தினார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிப்போனதால் மீண்டும் சூர்யா பட வேலைகளை தொடங்கிவிட்டார் சிறுத்தை சிவா.

இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா ராஜா தயாரிக்கிறார். இமான் இசையமைக்க உள்ளார். தற்போது சூர்யா பாண்டிராஜ் படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.