ETV Bharat / sitara

’எனது தந்தை உடல்நிலை மோசமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இல்லை’ - எஸ்.பி. சரண் ட்வீட் - பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை நிலவரம்

எனது தந்தை உடல்நிலை மோசமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இல்லை, விரைவில் குணமாகி திரும்புவார் என நம்புவோம் என பாடகரும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகனுமான எஸ்.பி. சரண் ட்வீட் செய்துள்ளார்.

Singer SP Balasubramaniyam son SP charan
பாடகர் எஸ்.பி.சரண்
author img

By

Published : Aug 15, 2020, 2:34 AM IST

இதுதொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

'எனது தந்தை உடல்நிலை பற்றி தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், கவலைக்கிடமாக இல்லை. எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என நம்புவோம். அனைவரின் அக்கறை மற்றும் பிரார்த்தனைக்கு நன்றிகள்'

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், நேற்று (ஆக.14) இரவு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

  • The news that is out on #puthiyathalaimurai is not correct. #spb is critical but is in safe hands at #Mgm healthcare. We are all confident that #spb Will be back with all of us sooner than later. Thank you all for your concern and prayers. 🙏

    — S. P. Charan (@charanproducer) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் என திரையுலகினரின் பலரும் எஸ்.பி.பி. குணமாகி மீண்டு வர வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையின் தற்போதைய நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: விளம்பரத்திற்காக பேசும் மீரா மிதுன்: ட்விட்டர் கணக்கை முடக்க ஜோ மைக்கல் பிரவீன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.