டெல்லி : இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மும்பை பீரிஸ் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதேபோல் லதா மங்கேஷ்கரின் உறவினரும் (மருமகள்) கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவருக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.
லதா மங்கேஷ்கர் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவருக்கு இந்தியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதாசாகேப் பால்கே மற்றும் பிரான்ஸ் அரசின் உயரிய குடிமக்கள் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் 1974ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். இவர் 1948-1974ஆம் ஆண்டு காலகட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு நாட்டின் மிகப்பெரிய கௌரவமான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கரோனாவிலிருந்து மீண்டார் சத்யராஜ்!