’ராதே ஷ்யாம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ‘மகாநடி’ பட இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 21ஆவது படமாகும். அறிவியல் பின்னணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் (செப்.21) சிங்கிதம் ஸ்ரீனிவாசராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், கமல்ஹாசனை வைத்து ’அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”மூடிய கதவுக்கு பின்னால்”- பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்த கஸ்தூரி!