'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்திற்கு பிறகு சிம்பு ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில காரணங்களால் தள்ளிப்போன படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'மாநாடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிளம்ஸ் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.
அதில் சிம்பு கருப்பு நிற உடையில், கருப்பு நிற கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக உள்ளார். அவருடன் நடிகர் மனோஜ் போலீஸ் உடையில் உள்ளார். இதன்முலம் அவர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அப்புகைப்படங்கள் தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: 'உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டேன்' - ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு!