சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சி. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நீண்ட நாள் ஷெட்யூலில் திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இதற்கிடையில் கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் மாதம் மீண்டும் புதுச்சேரியில் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நடைப்பெற்றுவருகிறது.
-
#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020
இந்த நிலையில், இன்று (நவ.21) படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் சிம்பு கழுத்தில் அணிந்திருக்கும் செயினின் டாலர் முடிவில்லா தன்மையை குறிக்கும் வகையிலும் 'மாநாடு' எழுத்தில் ரீப்பிட் மோடையும் ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது சிம்புவின் நெற்றியில் குண்டுடன் தலையிலிருந்து ரத்தம் வழிய தொழுகை செய்வது போன்று 'அப்துல் காலிக்' என்று அவரது கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே டைட்டில் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவிக்கையில் கலவரத்திற்கு மத்தியில் சிம்பு அமைதியாக தொழுகை செய்து கொண்டிருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருந்தனர்.
"அகிம்சை முறையே மனிதத்தன்மை வெளிப்படுத்தும் சிறந்த ஆற்றல்" என காந்தி கூறிய வாசகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியிட்டுள்ளனர்.
படம் அகிம்சையும் கலவரத்தையும் மையமாக எடுக்கப்பட்டுள்ளதா என படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் போது தெரியவரும்.
இயக்குநர் வெங்கட் பிரபு ஜாலியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பிம்பத்தை உடைக்க முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து அரசியல் படத்தை எடுத்து வருகிறார்.
'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதையடுத்து ரசிகர்கள் #maanaadufirstlook என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.