'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. ஆனால் சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும், விரைவில் புதிய சில மாற்றங்களுடன் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
இப்படத்தில் சிம்புக்கு பதில் வேற ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்புளர் முடிவு செய்திருந்தார். இந்த வேளையில் மகா மாநாடு என்னும் புதிய படத்தை சிம்புவே இயக்கி நடிக்க இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டதையடுத்து சிம்பு இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
-
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019
இந்த சூழலில், சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டு 40 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்ல இருக்கிறார். தற்போது மாலை போட்ட புகைப்படங்கள் இணையத்தில் உலாவருகின்றன. இதனையடுத்து சுரேஷ் காமாட்சி சிம்பு கோவிலில் சந்தித்தார். பின் தனது ட்விட்டர் பக்கத்தில், விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.