நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்கு லண்டனில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நார்தன் இயக்கத்தில் ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கவுள்ளார். இது லிட்டில் சூப்பர் ஸ்டாரின் 45வது படம என்பது STR45 ஹேஷ்டாக் வைரலாகி வருகிறது.