வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ட்ரெய்லர்
'மாநாடு' தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 2.09 நிமிடம் ஓடும் ட்ரெய்லர் 'யுவர் டைம் ஸ்டார்ட் அகைன்' என சிம்பு பேசுவதுடன் தொடங்குகிறது.
-
Semma creativity!!! Eight million and counting!! #MaanaaduTrailerWonHearts https://t.co/6UoQlEDit6 pic.twitter.com/92jakvbbgn
— venkat prabhu (@vp_offl) October 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Semma creativity!!! Eight million and counting!! #MaanaaduTrailerWonHearts https://t.co/6UoQlEDit6 pic.twitter.com/92jakvbbgn
— venkat prabhu (@vp_offl) October 5, 2021Semma creativity!!! Eight million and counting!! #MaanaaduTrailerWonHearts https://t.co/6UoQlEDit6 pic.twitter.com/92jakvbbgn
— venkat prabhu (@vp_offl) October 5, 2021
யுவனின் இசை
'என்னய்யா டெனன்ட் படம் மாதிரி குழப்புற' என வசனம் பேசும் ஓய்.ஜி. மகேந்திரன். முதலமைச்சரை அரசியல் மாநாட்டில் கொலை செய்வதற்கு முயற்சி நடக்கிறது. கொலை செய்பவர் யார், கொலையை தடுக்க முயற்சிப்பவர் யார் என கதை நகர்வது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. யுவனின் இசை, பிரவீனின் படத்தொகுப்பு அட்டகாசம்.
இதுவரை இந்த ட்ரெய்லர் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சமூகவலைதளத்தில் பார்த்துள்ளதாக மாநாடு படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'எப்பா சாமி ஏன்?' - வதந்தியால் அப்செட்டான வெங்கட் பிரபு