'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, கன்னட இயக்குநர் நார்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் முதல்முறையாக கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடிக்கிறார். படத்தின் பூஜை தொடங்கப்பட்டு கர்நாடகாவில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டியுடன் நிழல் உலக தாதாவாக சிம்பு நடிக்கும் இப்படத்தை ஞானவேல் ராஜா பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
![சிம்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3704114_si.jpg)
படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டரில் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், கவுதம் கார்த்திக்குடன், சிம்பு கருப்பு சட்டைச நரைத்த தாடியுடன் இருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்தார். அப்போது ஹன்சிகாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது.
![படப்பிடிப்பின் போது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3704114_simbu.jpg)
இப்படத்தை முடித்த பின்னர்தான் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். மாநாடு படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணியை தொடங்க தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.