கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியானப் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ஜெஸ்ஸி கதாபாத்திரத்தையும், கார்த்திக் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே த்ரிஷா கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே குறும்படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அதை கெளதம் மேனன் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கிய குறும்படமான 'கார்த்திக் டயல் செய்த எண்' சமீபத்தில் வெளியானது.
இதில் கதை எழுத முடியாமல் தவிக்கும் கார்த்திக்கிற்கு (சிம்பு) ஜெஸ்ஸி (திரிஷா) உத்வேகம் அளிப்பதைப்போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜெஸ்ஸியிடம் தொலைபேசியில் பேசிய பின்னர், புத்துணர்ச்சி பெற்ற கார்த்திக், கதை எழுதுவதுபோல் குறும்படம் இருக்கும்.
இப்படம் வெளியான 48 மணி நேரத்திலேயே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்தக் குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியம் அடைந்ததாக இயக்குநர் கௌதம் தெரிவித்தார். அதேசமயம் இந்தக் குறும்படத்தை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
-
#STR #Simbu #SilambarasanTR Explains How #KarthikDialSeythaYenn Was Shot As Simple As That@STR_360 @hariharannaidu pic.twitter.com/x2A27UsmuG
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#STR #Simbu #SilambarasanTR Explains How #KarthikDialSeythaYenn Was Shot As Simple As That@STR_360 @hariharannaidu pic.twitter.com/x2A27UsmuG
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 23, 2020#STR #Simbu #SilambarasanTR Explains How #KarthikDialSeythaYenn Was Shot As Simple As That@STR_360 @hariharannaidu pic.twitter.com/x2A27UsmuG
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 23, 2020
இந்நிலையில், சிம்பு இப்படத்தில் எப்படி நடித்திருந்தார் என்பது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகளை கெளதம் மேனன் காணொலி மூலம் விளக்குகிறார். காட்சியை புரிந்துகொண்ட சிம்பு நீங்கள் சொன்னபடியே நடிக்கிறேன் என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கார்த்திக் - ஜெஸியின் காதல் பயணம் தொடரும்' : கௌதம் மேனன்