ETV Bharat / sitara

'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு!

author img

By

Published : Nov 8, 2020, 8:25 PM IST

நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சிம்பு
சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

படப்பிடிப்பு முடிந்த கையோடு, சிம்பு படக்குழுவினருக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி, சேலை, இனிப்புகள் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கியுள்ளார். தீபாவளி பரிசு கொடுத்த சிம்புவிற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஈஸ்வரன்' பட டப்பிங் பணியை முடித்த சிம்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.