'நாய்கள் ஜாக்கிரதை' படத்தையடுத்து காவல் துறை அலுவலராக சிபிராஜ் நடித்துள்ள படம் 'வால்டர்'. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கஞ்வாலா, சார்லி, முனீஷ்காந்த், சனம் ஷெட்டி, ரித்விகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் வால்டர் படத்தின் ட்ரெய்லரை, இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை கடத்தும் வில்லனிடமிருந்து சிபிராஜ் எப்படி குழந்தைகளைக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை என்று ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஒரு பக்கம் அக்க்ஷன் மற்றொரு பக்கம் காதல் காட்சிகள் என்று ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. வால்டர் ட்ரெய்லர் சிபிராஜ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்!