நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சமீப காலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்ததையடுத்து இசை ஆல்பங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்திவந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வெளியாகும் தொடரில் நடிக்க இருக்கிறார். 'டிரெட்ஸ்டோன்' என்று பெயரிடப்பட்டுள்ள தொடரில் நீரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இக்கதாப்பாத்திரம் டெல்லியில் உணவகமொன்றில் பணியாளராக வேலை பார்த்துக்கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலாவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்ட இத்தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
இந்தத் தொடரில் ஜெரேமி இர்வின், பிரையன் ஜே. ஸ்மித் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தத் தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ-வில் உள்ள பிளாக் ஆப்ஸ் புரோகிராமை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.