ETV Bharat / sitara

டொராண்டோ திரைப்பட விழா - ஷார்ட் கட் படத்துக்கு 2 விருதுகள் - டொராண்டோ திரைப்பட விழா

சென்னை: டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் ஷார்ட் கட் திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.

ஷார்ட் கட்
ஷார்ட் கட்
author img

By

Published : Sep 22, 2021, 4:59 PM IST

திரைப்பட விழாக்களில் கனடாவில் நடக்கும் டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவும் முக்கியமானது. இவ்விழாவில் விருது பெறுவது பெருமையாகவும் கருதப்படுகிறது.

அந்தவகையில், இரண்டாவது டொராண்டோ தமிழ் திரைப்பட விழா கடந்த 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடந்து முடிந்தது. அதில், மணி & மணி கிரியேஷன் தயாரித்துள்ள ஷார்ட் கட் திரைப்படம் கலந்துகொண்டது. அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாக உருவாகியிருக்கும் ஷார்ட் கட் படத்தை மணி தாமோதரன் இயக்கியுள்ளார்.

அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார். கே.எம். ரயான் இசையமைக்க, விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நாயகனாக ஸ்ரீதர் நடிக்க, உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் 'அறம்' ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஷார்ட் கட் திரைப்படம் டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருது உள்ளிட்ட இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.

விருது பெற்றது குறித்து கதைநாயகன் ஸ்ரீதர் பேசுகையில், “எனது முதல் படத்திலேயே இந்த கௌரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.

படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில், “பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது. இதுதான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்.

கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாக 'ரெட் ஜெமினி' கேமராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.