ETV Bharat / sitara

படப்பிடிப்பு தளத்தை மாற்றவுள்ள ஷங்கர் - விபத்து விவகாரத்தால் முடிவு!

'இந்தியன்-2' திரைப்பட படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, படப்பிடிப்பை மற்றொரு இடத்திற்கு மாற்ற இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : May 20, 2020, 9:14 PM IST

Shankar shifts shooting location due to accident in previous location

இயக்குநர் ஷங்கர் தனது வெற்றிப் படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக 2017ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஃபிலிம் சிட்டியில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் ஷங்கரின் துணை இயக்குநர் உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு கரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை மனதில் கொண்டு, படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற ஷங்கர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்படத்தின் படப்பிடிப்பை பின்னி மில்லுக்கு மாற்ற ஷங்கர் யோசித்திருக்கிறார் என்றும்; ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்புத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க... ரத்தான கேன்ஸ் திரைப்பட விழா: நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட எமி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.